/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
வாலாஜாபாத் டாஸ்மாக் 'பார்'களில் நள்ளிரவு வரை மது விற்பனை
/
வாலாஜாபாத் டாஸ்மாக் 'பார்'களில் நள்ளிரவு வரை மது விற்பனை
வாலாஜாபாத் டாஸ்மாக் 'பார்'களில் நள்ளிரவு வரை மது விற்பனை
வாலாஜாபாத் டாஸ்மாக் 'பார்'களில் நள்ளிரவு வரை மது விற்பனை
ADDED : மார் 28, 2024 12:58 AM
வாலாஜாபாத்:வாலாஜாபாத்தில் ஆசிரியர் நகர், பச்சையம்மன் கோவில் தெரு மற்றும் ஊத்துக்காடு அருகே என மூன்று இடங்களில் அரசு மதுபானக் கடை இயங்குகிறது. இந்த கடைகளோடு மதுக்கூடம் செயல்படுத்தப்படுகிறது.
இந்த டாஸ்மாக் மதுக்கூடங்களில் விடிய விடிய மது பாட்டில் விற்பனை செய்யப்படுவதாகக் கூறப்படுகிறது.
பொதுவாக டாஸ்மாக் கடைகள், பிற்பகல் 12:00 மணி முதல், இரவு 10:00 மணி வரை திறந்திருக்க வேண்டும் என்பது விதி. ஆனால், வாலாஜாபாத்தில் இயங்கும் கடைகள் இரவு 9:45 மணிக்குள் மூடப்படுவதாக தெரியவந்துள்ளது.
மதுக்கூடத்தின் உரிமை யாளர்கள் இதை பயன்படுத்திக் கொண்டு அரசு மதுபாட்டில்களை தங்களது கடைகளில் வாங்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்கின்றனர். அதன் மூலம் கிடைக்கும் தொகையில் டாஸ்மாக்கில் உள்ளவர்களுக்கும் ஒரு பங்கு தருவதாக 'குடி'மகன்கள் புகார் கூறுகின்றனர்.
இதுகுறித்து வாலாஜாபாத் பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:
படப்பை, ஒரகடம், ஸ்ரீபெரும்புதுார், தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு வாலாஜாபாத் மைய பகுதியாக உள்ளது. அப்பகுதிகளில் இயங்கும் தொழிற்சாலைகளில் பணியாற்றும் வாலாஜாபாத் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த தொழிலாளர்கள், இரவுநேர பணி முடிந்து, 10:00 மணிக்கு மேல் இருசக்கர வாகனங்களில் வீடு திரும்புகின்றனர்.
அப்போது வாலாஜாபாத் வழியாக வரும்போது டாஸ்மாக் மதுக்கூடங்களில் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படும் மது பாட்டில்களை அருந்திவிட்டு போதையில் வாகனங்களை ஓட்டுகின்றனர்.
இதனால், இரவு நேரங்களில் இப்பகுதிகளில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. எனவே, இப்பகுதி டாஸ்மாக் மதுக்கூடங்களில் கூடுதல் விலைக்கு மது பாட்டில்கள் விற்பனை செய்வதை தடுக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,
இவ்வாறு அவர்கள் கூறினர்.