/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
கடல்மங்கலம் குளத்தின் கரை சரிவு தரமற்ற பணியால் அரசு நிதி வீணடிப்பு
/
கடல்மங்கலம் குளத்தின் கரை சரிவு தரமற்ற பணியால் அரசு நிதி வீணடிப்பு
கடல்மங்கலம் குளத்தின் கரை சரிவு தரமற்ற பணியால் அரசு நிதி வீணடிப்பு
கடல்மங்கலம் குளத்தின் கரை சரிவு தரமற்ற பணியால் அரசு நிதி வீணடிப்பு
ADDED : ஜூலை 05, 2024 12:15 AM

உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியம், கடல்மங்கலம் கிராமத்தில், பாட்டியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் அருகாமையில் கடமங்கலம் ஊராட்சிக்கு சொந்தமான 3 ஏக்கர் பரப்பிலான துரைக்குளம் உள்ளது.
இக்குளம் அப்பகுதியினரின் நிலத்தடிக்கான ஆதாரமாகவும், அப்பகுதியில் பராமரிக்கும் கால்நடைகளுக்கு நீர் ஆதாரமாகவும் இருந்து வருகிறது.
இந்த குளத்தை துார்வாரி கரையை பலப்படுத்த அப்பகுதியினர் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். அக்கோரிக்கையை ஏற்று, ஊரக வளர்ச்சித் துறை சார்பில், 2023- - 24ம் ஆண்டுக்கான அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ், குளம் சீரமைத்து கரை பலப்படுத்த 8 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது.
அதற்கான பணி துவங்கி, குளக்கரையின் உள்பகுதியில் கருங்கல் பதித்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்றன. எனினும், கரையின் ஒருபுறம் மட்டும் பணி மேற்கொள்ளப்பட்டு மற்றொருபுறம் விடுபட்டுள்ளது.
இதனிடையே, சில தினங்களுக்கு முன் பெய்த மழை காரணமாக பணி மேற்கொண்ட கரைப்பகுதியில் திடீர் சரிவு ஏற்பட்டு புதிதாக பதித்த கருங்கற்கள் ஆங்காங்கே பெயர்ந்து சேதம் அடைந்துள்ளன.
பணி முடிந்து, ஆறு மாதத்தில் குளக்கரை சிதிலமடைந்து இருப்பது அப்பகுதியினர் இடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. தரமான முறையில் பணி மேற்கொள்ளாததே குளக்கரை சரிவுக்கு காரணம் என அப்பகுதியினர் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.
எனவே, கடல்மங்கலம் துரைக்குளம் மீண்டும் சீரமைத்து, குளக்கரையை சுற்றிலும் கருங்கல் பதித்து கரையை பலப்படுத்த சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி கால்நடை பராமரிப்போர் மற்றும் விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.