/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மின்மோட்டார் பழுதால் காட்சிப்பொருளான தண்ணீர் தொட்டி
/
மின்மோட்டார் பழுதால் காட்சிப்பொருளான தண்ணீர் தொட்டி
மின்மோட்டார் பழுதால் காட்சிப்பொருளான தண்ணீர் தொட்டி
மின்மோட்டார் பழுதால் காட்சிப்பொருளான தண்ணீர் தொட்டி
ADDED : ஜூன் 14, 2024 11:57 PM
ஸ்ரீபெரும்புதுார்:பேரிஞ்சம்பாக்கம் ஊராட்சியில், பல ஆண்டுகளாக பயன்பாடு இல்லாமல், காட்சி பொருளாக உள்ள தண்ணீர் தொட்டியை மீண்டும் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என, அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியத்திற்குட்பட்ட, பேரிஞ்சம்பாக்கம் ஊராட்சி, அம்பேத்கர் தெருவில் ஏராளமான வீடுகள் உள்ளன. அப்பகுதி மக்களின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய, அங்கு மினி தண்ணீர் தொட்டி அமைக்கப்பட்டது.
இந்த நிலையில், மின் மோட்டாரில் ஏற்பட்ட பழுது காரணமாக, இரண்டு ஆண்டுகளாக மேலாக தண்ணீர் தொட்டி பயன்பாடு இல்லாமல் உள்ளது.
இதனால், அப்பகுதியினர் அன்றாட தேவைக்கு தண்ணீர் இன்றி அவதி அடைந்து வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகரிகள், மின் மோட்டாரை சரிசெய்து, தண்ணீர் தொட்டியை மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை விடுத்துள்ளனர்.