/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
குழாய் உடைப்பால் வீணாகும் குடிநீர்
/
குழாய் உடைப்பால் வீணாகும் குடிநீர்
ADDED : மார் 06, 2025 12:39 AM

உத்திரமேரூர்:உத்திரமேரூர் அடுத்த, மாகரல் கிராமத்தில், காஞ்சிபுரத்தில் இருந்து, உத்திரமேரூர் செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையோரத்தில், வெங்கச்சேரி செய்யாற்றில் இருந்து ஆற்பாக்கம் கிராமத்திற்கு செல்லும் குடிநீர் குழாய், பூமிக்கு அடியில் புதைக்கப்பட்டு உள்ளது.
இந்த குழாய், ஆறு மாதமாக விரிசல் ஏற்பட்டு, அப்பகுதியில் குடிநீர் வீணாகி வருகிறது. வீணாக வெளியேறும் குடிநீர், சாலையோரத்தில் செல்வதால், வாகன ஓட்டிகள் நிலைத் தடுமாறி விழுந்து விபத்தில் சிக்கி வருகின்றனர்.
பின், சாலையில் தேங்கும் நீரில் நோய் பரப்பும் கொசுக்கள் உற்பத்தியாகி, அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயமும் உள்ளது. குடிநீர் தொடர்ந்து வெளியேறி வருவதால், ஆற்பாக்கம் பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு உள்ளது.
எனவே, கோடை காலம் துவங்க உள்ளதால், குடிநீரை வீண் விரயம் செய்யாமல், உடைந்த குழாயை சீரமைக்க, துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.