/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மிளகர்மேனி பொதுக்குளம் துார் வாருவது எப்போது?
/
மிளகர்மேனி பொதுக்குளம் துார் வாருவது எப்போது?
ADDED : பிப் 22, 2025 01:20 AM

திருவானைக்கோவில்,:உத்திரமேரூர் ஒன்றியம் திருவானைக்கோவில் ஊராட்சிக்கு உட்பட்டது மிளகர்மேனி கிராமம். இக்கிராமத்தில், சாலையோரத்தில் 1 ஏக்கர் பரப்பிலான பொதுக் குளம் உள்ளது. மிளகர்மேனி மற்றும் அருகே உள்ள தென்பாதி கிராம விவசாய நிலங்களுக்கு, நிலத்தடி நீராதாரமாக இக்குளம் இருந்து வருகிறது.
மேலும், மழைக்காலங்களில் குளம் நிரம்பி, தண்டரை வழியாக சிதண்டி மண்டபம் ஏரிக்கு தண்ணீர் சென்றடைகிறது. ஆனால், சில ஆண்டுகளாக முறையான பராமரிப்பு இல்லாததால், குளம் துார்ந்து காணப்படுகிறது.
மேலும், குளத்திற்கான வரத்து கால்வாய்களும் துார்ந்ததால், பருவ மழைக்காலத்திலும் குளத்திற்கும் போதுமான நீர்வரத்து இல்லாத நிலை உள்ளது. இதனால், இந்த குளம் தற்போது பயன்பாடு இல்லாமல் வீணாகி வருகிறது.
எனவே, மிளகர்மேனி பொதுக்குளத்தை துார்வாரி, சுற்றிலும் கரையை பலப்படுத்த வேண்டும். இக்குளத்திற்கான வரத்து கால்வாயை சீரமைத்து, மழைக்காலத்தில் குளத்திற்கு தண்ணீர் வந்தடைய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.