/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
வடிகால் பணிகள் அரைகுறை முழுமை பெறுவது எப்போது?
/
வடிகால் பணிகள் அரைகுறை முழுமை பெறுவது எப்போது?
ADDED : ஆக 12, 2024 04:50 AM

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் - செங்கல்பட்டு இடையேயான சாலையை, நெடுஞ்சாலைத் துறை இரு ஆண்டு களுக்கு முன் அகலப்படுத்தும் பணியில் ஈடுபட்டது. சாலை அகலப் படுத்தும் பணி மட்டு மல்லாமல், இரு பக்கமும் மழைநீர் வடிகால் அமைக்கப்பட்டது.
ஆனால், இந்த பணி பல இடங்களில் அரைகுறையாக விடப்பட்டு உள்ளதால், அருகில் வசிப்போருக்கு கடும் சிரமத்தை ஏற்படுத்தி வருகிறது.
வாலாஜாபாத் அருகே திம்மராஜாம்பேட்டை கிராமத்தில், மழைநீர் வடிகால் பணி அரைகுறையாக நின்றுள்ளதால், அருகில் வசிப்போர் தினமும் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.
மழைநீர் சரிவர வடியாமல் போவதால், சேரும் சகதியுமாக காட்சியளிப்பதாக தெரிவிக்கின்றனர்.
நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள், விடுபட்ட மழைநீர் வடிகால் பணியை சரிசெய்ய வேண்டும் என, அப்பகுதி வாசிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.