/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
வாலாஜாபாதில் மீன் சந்தை அமைவது எப்போது? காற்றில் பறக்கும் தி.மு.க., தேர்தல் அறிக்கை
/
வாலாஜாபாதில் மீன் சந்தை அமைவது எப்போது? காற்றில் பறக்கும் தி.மு.க., தேர்தல் அறிக்கை
வாலாஜாபாதில் மீன் சந்தை அமைவது எப்போது? காற்றில் பறக்கும் தி.மு.க., தேர்தல் அறிக்கை
வாலாஜாபாதில் மீன் சந்தை அமைவது எப்போது? காற்றில் பறக்கும் தி.மு.க., தேர்தல் அறிக்கை
ADDED : மே 06, 2024 03:38 AM
காஞ்சிபுரம், : காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் பேரூராட்சியிலும், சுற்றியுள்ள கிராமங்களிலும் இறைச்சி கடைகள் பல உள்ளன. ஆனால், மீன் விற்பனை செய்யும் கடைகள் பரவலாக இல்லை.
வாலாஜாபாத் பஜார் வீதியில், சில கடைகளில் மீன் விற்பனை செய்கின்றனர். கிராமப்புறங்களில், இருசக்கர வாகனங்களில் சென்று சிலர் மீன் விற்பனை செய்கின்றனர்.
இதனால், கிராம மக்கள் விரும்பிய மீன் வகைகளை வாங்குவதற்கு, காஞ்சிபுரம் அல்லது செங்கல்பட்டு ஆகிய பகுதிகளுக்கு, 15 கி.மீ., துாரத்துக்கு மேல் பயணிக்க வேண்டிய சிரமம் உள்ளது.
இதனால், வாலாஜாபாத்தில் மீன் சந்தை ஒன்றை அமைக்க வேண்டும் என, வாலாஜாபாத் பேரூராட்சி மக்களும், சுற்றியுள்ள கிராமத்தினரும் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்நிலையில், 2021ல் சட்டசபை தேர்தலின்போது, தி.மு.க., தேர்தல் அறிக்கையில், வாலாஜாபாத்தில் மீன் சந்தை அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து, தி.மு.க., ஆட்சி அமைந்தவுடன் மீன் சந்தை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மீன் சந்தை அமைப்பதற்கான இடம் தேர்வுகூட இன்றுவரை நடைபெறவில்லை.
மீன் சந்தை அமைப்பார்களா என்ற சந்தேகம், வாலாஜாபாத் மக்களிடையே எழுந்துள்ளது.
தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதை உறுதி செய்யும் வகையில், வாலாஜாபாத்திலேயே பெரிய அளவிலான மீன் சந்தை ஒன்றை அமைக்க, மாவட்ட நிர்வாகம், உத்திரமேரூர் தி.மு.க., - -எம்.எல்.ஏ., சுந்தர் உள்ளிட்டோர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.