/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
புது சமுதாய கூடம் அமைவது எப்போது?
/
புது சமுதாய கூடம் அமைவது எப்போது?
ADDED : ஜூன் 08, 2024 05:29 AM
காஞ்சிபுரம்,: காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் சமுதாய கூடங்கள் உள்ளன. குறைந்த வாடகை வசூலிப்பதால், பலரும் நிகழ்ச்சிகள் நடத்த சமுதாய கூடங்களை விரும்புகின்றனர்.
மாநகராட்சியின் சில பகுதிகளில் சமுதாய கூடங்கள் கட்ட வேண்டும் என, நகரவாசிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
குறிப்பாக, பிள்ளையார்பாளையம் பகுதியில் மாநகராட்சி சார்பில் சமுதாய கூடம் கட்ட வேண்டும் என, நீண்ட நாட்களாகவே கோரிக்கை இருந்து வருகிறது.
பிள்ளையார்பாளையம் பகுதியில், 30,000க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். ஒவ்வொரு மாதமும் பலவேறு நிகழ்ச்சிகள், திருமண மண்டபங்களில் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், திருமண மண்டபங்களின் வாடகை, 40,000 ரூபாய்க்கும் மேல் இருப்பதால், பொருளாதார நிலையில் பின்தங்கியவர்கள் அதிக வாடகை செலுத்துவதில் சிரமப்படுகின்றனர்.
எனவே, பிள்ளையார் பாளையம் பகுதியில், மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் சமுதாய கூடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.