/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
கரியன்கேட் ரயில் கடவு பாதையில் நிழற்கூரை அமைக்கப்படுமா?
/
கரியன்கேட் ரயில் கடவு பாதையில் நிழற்கூரை அமைக்கப்படுமா?
கரியன்கேட் ரயில் கடவு பாதையில் நிழற்கூரை அமைக்கப்படுமா?
கரியன்கேட் ரயில் கடவு பாதையில் நிழற்கூரை அமைக்கப்படுமா?
ADDED : மே 07, 2024 04:20 AM
காஞ்சிபுரம் ; காஞ்சிபுரம் - அரக்கோணம் - திருத்தணி வரையில், 41 கி.மீ., இருவழிச் சாலை உள்ளது. இந்த சாலை, சென்னை - கன்னியாகுமரி சாலை விரிவாக்க திட்டத்தில், நான்குவழிச் சாலையாக விரிவுபடுத்தும் பணி நடந்து வருகிறது.
காஞ்சிபுரத்தில் இருந்து, பரமேஸ்வரமங்கலம் கிராமம் வரையில், சாலை விரிவுபடுத்தும் பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இதில், கரியன்கேட் ரயில்வே கடவுப்பாதையில், உயர்மட்ட தரைப்பாலம் பணிக்கு, மண் பரிசோதனை செய்தனர். அந்த பணிக்கு, நிதி ஒதுக்கீடு செய்யாததால், பாலம் கட்டும் பணி கிடப்பில் போடப்பட்டு உள்ளது.
தற்போது, கோடை காலம் துவங்கி இருப்பதால், கரியன்கேட் ரயில் கடவுப்பாதையில், வாகன ஓட்டிகள் நீண்ட நேரம் வெயிலில் நிற்க வேண்டிய நிலை உள்ளது.
குறிப்பாக, மாலை 4:00 மணிக்கு, சென்னை கடற்கரையில் இருந்து, அரக்கோணம் செல்லும் மின்சார ரயில், கரியன்கேட் கடந்து செல்லும் போது, வாகன ஓட்டிகள் நீண்ட நேரம், கரியன்கேட்டில் காத்திருக்க வேண்டி உள்ளது.
இதுபோன்ற நேரங்களில் போதிய நிழல் இல்லாததால், வாகன ஓட்டிகள் வெயிலில் காத்திருக்க வேண்டி நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே, காஞ்சிபுரம் அடுத்த, கரியன்கேட் ரயில் கடவுப்பாதை ஓரத்தில், நிழல் வலைக்கூரை அமைக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்து உள்ளது.