/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
கோப்பை வெல்வாரா தெலுங்கானா செஸ் வீரர்?
/
கோப்பை வெல்வாரா தெலுங்கானா செஸ் வீரர்?
ADDED : ஆக 27, 2024 11:40 PM

சென்னை, தமிழ்நாடு மாநில செஸ் சங்கம் சார்பில், ஐ.எம்., நார்ம் க்ளோஸ்ட்டு சர்க்யூட் செஸ் தொடரின் ஐந்தாம் கட்ட போட்டி, போரூரில் உள்ள தனியார் ஹோட்டலில் நடக்கிறது.
இப்போட்டியில், ஸ்லோவாக்கியாவைச் சேர்ந்த மானிக் மிகுலாஸ், துர்க்மெனிஸ்தான் வீரர் ஓராஸ்லி, மங்கோலியா வீராங்கனை யூரிந்துயா உர்ட்சைக் உட்பட 10 பேர் மோதி வருகின்றனர்.
நேற்று நடந்த எட்டாவது சுற்றில், தெலுங்கானாவின் ஸ்ரீராம் ஆதர்ஷ் உப்பலா மற்றும் துர்க்மெனிஸ்தான் ஓராஸ்லி மோதினர். இதில், 37வது நகர்வில் ஸ்ரீராம் ஆதர்ஷ் உப்பலா வெற்றி பெற்று, ஆறு புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார்.
இன்றைய இறுதிப் போட்டியில், இவர் ஒரு புள்ளி பெற்றால் ஒரு நார்ம்ஸ் நிறைவுசெய்யலாம்.
அதுமட்டுமல்லாமல், 'டிரா' செய்தாலும் சாம்பியன் கோப்பையை பெற வாய்ப்புள்ளது. இதனால், அனைவரது கவனமும் ஸ்ரீராம் ஆதர்ஷ் உப்பலா மீது உள்ளது.
அவரை தொடர்ந்து, ரஷ்யாவின் அலெக்சாண்டர், டேவிட் ஆகியோர் தலா 5.5 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளனர்.