/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
தூர்ந்துள்ள வடிகால்வாய் சீரமைக்கப்படுமா?
/
தூர்ந்துள்ள வடிகால்வாய் சீரமைக்கப்படுமா?
ADDED : மார் 07, 2025 12:42 AM

உத்திரமேரூர்:உத்திரமேரூர் பேரூராட்சியில் உள்ள 18 வார்டுகளில் 4,000க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்குள்ள குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் மற்றும் மழைநீர் சாலைகளில் தேங்குவதை தவிர்க்க, வடிகால்வாய்கள் அமைக்கப்பட்டு பயன்பாட்டில் இருந்து வருகிறது.
இந்நிலையில், வந்தவாசி சாலையில் உள்ள மழைநீர் வடிகால்வாய் முறையான பராமரிப்பு இல்லாமலும், கால்வாய் தடுப்பு சுவர் சரிந்தும் உள்ளது.
செடி, கொடிகள் வளர்ந்து உள்ளன. மேலும், கால்வாயில் மண் தூர்ந்து நீரானது வடிந்து செல்ல வழி இல்லாமல் உள்ளது. தொடர்ந்து, அப்பகுதிவாசிகள் கால்வாயில் காய்கறி மற்றும் மாமிச கழிவுகளை பிளாஸ்டிக் கவரில் அடைத்து வீசி செல்கின்றனர்.
இதனால், அப்பகுதியில் துர்நாற்றமும் வீசி வருகிறது. எனவே, மண்ணால் தூர்ந்து கிடக்கும் மழைநீர் வடிகால்வாயை, சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.