/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
பண்ருட்டி கண்டிகை சந்திப்பில் சிக்னல் அமைக்கப்படுமா?
/
பண்ருட்டி கண்டிகை சந்திப்பில் சிக்னல் அமைக்கப்படுமா?
பண்ருட்டி கண்டிகை சந்திப்பில் சிக்னல் அமைக்கப்படுமா?
பண்ருட்டி கண்டிகை சந்திப்பில் சிக்னல் அமைக்கப்படுமா?
ADDED : செப் 11, 2024 08:20 PM
ஸ்ரீபெரும்புதுார்:வண்டலுார் -- வாலாஜாபாத் சாலையில் தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றனர். இந்த சாலையில், ஒரகடம் அடுத்த பண்ருட்டி கண்டிகையில் இருந்து பிரிந்து, எழிச்சூர் வழியே பாலுார் செல்லும் சாலை செல்கிறது.
இந்த நிலையில், தொழிற்சாலை கனரக வாகனங்கள் அதிகம் செல்லும் இந்த சந்திப்பில், சிக்னல் இல்லாததால் அடிக்கடி விபத்து நடந்து வருகிறது.
மேலும், மாலை நேரங்களில் தாறுமாறாக சாலையை கடக்கும் வாகனங்களால் ஏற்படும் விபத்து மற்றும் நெரிசலில் சிக்கி வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வருகின்றனர்.
எனவே, இந்த சந்திப்பில் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்த தானியங்கி சிக்னல் அமைக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.