/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
புதிதாக சமுதாய நலக்கூடம் காவிதண்டலத்தில் அமையுமா?
/
புதிதாக சமுதாய நலக்கூடம் காவிதண்டலத்தில் அமையுமா?
ADDED : ஆக 16, 2024 09:17 PM
உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியத்திற்கு உட்பட்டது காவிதண்டலம் கிராமம். இப்பகுதியை சுற்றி களியப்பேட்டை, திருவானைக்கோவில், ஒரக்காட்டுப்பேட்டை, விச்சூர் உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன.
இந்த கிராமங்களில், 3,000க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இவர்கள், தங்கள் இல்ல சுபநிகழ்ச்சிகளை, செங்கல்பட்டில் உள்ள தனியார் மண்டபங்களில் நடத்தி வருகின்றனர்.
இங்குள்ள நடுத்தர மக்கள் தனியார் திருமண மண்டபங்களில் பெருந்தொகை செலவு செய்து, குடும்ப நிகழ்ச்சிகளை நடத்த மிகவும் சிரமப்படுகின்றனர்.
இதுகுறித்து காவிதண்டலம் கிராம வாசிகள் கூறியதாவது:
காவிதண்டலம் மற்றும் சுற்றுவட்டார கிராமத்தினர், தங்களது குடும்ப நிகழ்ச்சிகளை செங்கல்பட்டு போன்ற பகுதிகளில் உள்ள தனியார் மண்டபங்களில் நடத்த வேண்டியுள்ளது.
இதனால், மண்டபத்திற்கான வாடகை மட்டுமின்றி, போக்குவரத்துக்கு தனி செலவு செய்ய வேண்டியுள்ளது. எனவே, சுற்றியுள்ள கிராம மக்களின் நலன் கருதி, காவிதண்டலத்தில் சமுதாயக்கூடம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

