/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
உணவு தயாரிக்கும் கூடத்தில் பாய்லர் வெடித்து பெண் காயம்
/
உணவு தயாரிக்கும் கூடத்தில் பாய்லர் வெடித்து பெண் காயம்
உணவு தயாரிக்கும் கூடத்தில் பாய்லர் வெடித்து பெண் காயம்
உணவு தயாரிக்கும் கூடத்தில் பாய்லர் வெடித்து பெண் காயம்
ADDED : ஜூலை 30, 2024 07:12 AM

ஸ்ரீபெரும்புதுார்: ஸ்ரீபெரும்புதுார் அடுத்த தத்தனுார் பகுதியில், தனியார் உணவு தயாரிக்கும் கூடம் இயங்கி வருகிறது. இங்கிருந்து, ஒரகடம், வல்லம், ஸ்ரீபெரும்புதுார் உள்ளிட்ட சிப்காட் பகுதிகளில் இயங்கிவரும் தொழிற்சாலைகளுக்கு, நாள்தோறும் உணவு வழங்கப்பட்டு வருகிறது. இதில், 30க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலை செய்து வருகின்றனர்.
இந்நிலையில், வழக்கம் போல் நேற்று காலை உணவு தயாரிக்கும் கூடத்தில் உள்ள பாய்லரில், சாப்பாடு வேக வைக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.
அப்போது, எதிர்பாராதவிதமாக பாய்லர் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. விபத்தில், பாயிலரை சுற்றி அமைக்கப்பட்டிருந்த இரும்பு தகடுகள் நாலாபுறமும் பறந்து சாலையில் விழுந்தன. இந்த விபத்தில், அங்கு பணியில் இருந்த சுசிலா, 53, என்பவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
அதே போல், வெடித்து சிதறிய இரும்பு தகடுகள், சாலையை கடந்து, எதிரே உள்ள மருந்தகத்தின் கண்ணாடி மேல் விழுந்ததில், கண்ணாடி உடைந்து அங்கிருந்தவரும் காயம்அடைந்தார்.
இதையடுத்து, சக ஊழியர்கள் விபத்தில் படுகாயமடைந்த சுசிலாவை மீட்டு, மாத்துாரில் உள்ள தனியார் மருத்துமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பினர்.
இது குறித்த தகவலின்படி, அங்கு வந்த ஒரகடம் போலீசார், விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.