/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
தேவரியம்பாக்கத்தில் மகளிர் தின விழா விமரிசை
/
தேவரியம்பாக்கத்தில் மகளிர் தின விழா விமரிசை
ADDED : மார் 09, 2025 03:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம்: வாலாஜாபாத் அடுத்த, தேவரியம்பாக்கம் ஊராட்சியில், நேற்று, சர்வதேச மகளிர் தின விழா நடந்தது. இந்த விழாவிற்கு, தேவரியம்பாக்கம் ஊராட்சி குழு நிர்வாகி புவனேஸ்வரி தலைமை வகித்தார்.
தேவரியம்பாக்கம் ஊராட்சி தலைவர் அஜய்குமார் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, உள்ளாட்சிகளில் மகளிரின் பங்களிப்பு, பெண்களின் உரிமைகளும் கடமைகளும் என்கிற தலைப்பில் விளக்கி பேசினார்.
மகளிர் குழு நிர்வாகி மஞ்சுளா உள்ளிட்ட பல்வேறு நிர்வாகிகள் பங்கேற்றனர்.
அதேபோல, அய்யன்பேட்டை அகத்தியா மழலையர் தொடக்கப் பள்ளியில் மகளிர் தின வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டன.