/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பலி
/
மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பலி
ADDED : மே 23, 2024 11:17 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பூந்தமல்லி,சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் அன்பழகன், 29. கட்டட தொழிலாளி. இவர், பூந்தமல்லி அடுத்த காட்டுப்பாக்கம், அம்மன் நகரில், வீடு கட்டும் பணியில் ஈடுபட்டு வந்தார்.
கட்டடத்தின் வெளிப்புற சுவரில் சிமென்ட் பூச்சு பணிக்கு, அருகே உள்ள மின்சார டிரான்ஸ்பார்மரை ஒட்டி கொம்புகள் அமைத்து, ஆபத்தான முறையில் சாரம் கட்டப்பட்டிருந்தது.
நேற்று, இந்த சாரம் மீது ஏறி நின்றபடி, அன்பழகன் பணியில் ஈடுபட்டார். எதிர்பாராத விதமாக டிரான்ஸ் பார்மர் மீது இவரது கால் பட்டதில், மின்சாரம்பாய்ந்தது. இதில், சம்பவஇடத்திலேயே அன்பழகன் உயிரிழந்தார்.