நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வாலாஜாபாத்:காஞ்சிபுரம்- செங்கல்பட்டு சாலை விரிவாக்க பணி நடக்கிறது. சாலை விரிவாக்க பணியில், சிவகங்கை மாவட்டம், சிங்கம்புனரி ஒன்றியம், ஐய்யம்பட்டி கிராமத்தை சேர்ந்த முத்துக்குமார் 54 என்பவர், தினக்கூலி தொழிலாளியாக வேலை செய்து வந்தார்.
வாலாஜாபாத் அடுத்த புளியம்பாக்கத்தில் உள்ள தற்காலிக குடியிருப்பு பகுதியில் தொழிலாளர்களோடு இவர் தங்கி உள்ளார்.
நேற்று காலை வயிற்று வலியால் மயங்கி விழுந்தார். சக தொழிலாளர்கள மீட்டு, காஞ்சிபுரம் அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் முத்து குமார் உயிர் இழந்ததாக தெரிவித்தனர். இதுகுறித்து வாலாஜாபாத் போலீசார் விசாரித்து வருகின்றனர்.