/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
காஞ்சி சுரகரேஸ்வரர் கோவிலில் குபேரர் அட்சய திருதியை வழிபாடு
/
காஞ்சி சுரகரேஸ்வரர் கோவிலில் குபேரர் அட்சய திருதியை வழிபாடு
காஞ்சி சுரகரேஸ்வரர் கோவிலில் குபேரர் அட்சய திருதியை வழிபாடு
காஞ்சி சுரகரேஸ்வரர் கோவிலில் குபேரர் அட்சய திருதியை வழிபாடு
ADDED : மே 11, 2024 12:43 AM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் சன்னிதி தெருவில், சுரகரேஸ்வரர் கோவில் உள்ளது. குபேர ஸ்தலமான இக்கோவிலில், மூலவர் உள்ள கருவறைக்கு முன் 5 அடி உயரத்தில் குபேரர் நின்ற நிலையில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.
அட்சய திருதியை அன்று, குபேரனை வழிபட்டால், செல்வ செழிப்பிற்கு வழிவகுப்பதாக பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.
இதனால், ஒவ்வொரு ஆண்டும், அட்சய திருதியை அன்று குபேரனுக்கு சிறப்பு பூஜை நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, அட்சய திருதியை தினமான நேற்று, குபேரர் அட்சய திருதியை வழிபாடு நடந்தது.
இதில், காலை 7:00 மணிக்கு அபிஷேக ஆராதனை, கூட்டு வழிபாடு சங்கல்பம், மங்கல இசை, காலை 10:00 மணிக்கு மஹா தீபாராதனையும் நடந்தது.
மதியம் 12:00 மணிக்கு அன்னதானமும், மாலை 6:00 மணிக்கு சென்னை ராகவேந்திரா கார்த்திக் குழுவினரின் தேவார இசை நிகழ்ச்சியும், இரவு 7:00 மணிக்கு குரு ராகவேந்திரா நாட்டியப் பள்ளி மாணவியரின் பரதநாட்டிய நிகழ்ச்சியும், இரவு 8:00 மணிக்கு மைசூர் சன்தன்குமாரின், புல்லாங்குழல் இசை நிகழ்ச்சியும் நடந்தது.