/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மழையால் மஞ்சள் நீர் கால்வாய் கட்டுமானப் பணியில் சுணக்கம்
/
மழையால் மஞ்சள் நீர் கால்வாய் கட்டுமானப் பணியில் சுணக்கம்
மழையால் மஞ்சள் நீர் கால்வாய் கட்டுமானப் பணியில் சுணக்கம்
மழையால் மஞ்சள் நீர் கால்வாய் கட்டுமானப் பணியில் சுணக்கம்
ADDED : ஆக 06, 2024 01:56 AM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் நகரில் பெய்யும் மழைநீர் வெளியேறும் வகையில், அமைக்கப்பட்ட, மஞ்சள்நீர் கால்வாய், கைலாசநாதர் கோவில் அருகே உள்ள, புத்தேரி பகுதியில் துவங்கி, கிருஷ்ணன் தெரு, ஆனந்தாபேட்டை, திருக்காலிமேடு வழியாக நத்தப்பேட்டை ஏரியில் இணைகிறது.
இக்கால்வாய் மீது, 40 கோடி ரூபாய் செலவில், கான்கிரீட் தளம் அமைக்கும் பணி துவக்கப்பட்டு நடந்து வருகிறது. இதில், ஒரு பகுதியாக ஆனந்தாபேட்டையில் திருக்காலிமேடு செல்லும் பிரதான சாலையோரம் உள்ள மஞ்சள்நீர் கால்வாயில் பக்கவாட்டு சுவர் அமைக்க அடித்தளம் அமைக்கும் பணி நடந்து வருகிறது.
இந்நிலையில், நேற்று முன்தினம் காஞ்சிபுரத்தில் பெய்த பலத்த மழையால், மஞ்சள்நீர் கால்வாயின் கட்டுமானப் பணிக்காக தோண்டப்பட்ட குழிகளில் மழைநீர் நிரம்பியதால், பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து, காஞ்சிபுரம் மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், ''மஞ்சள்நீர் கால்வாய் கட்டுமானப் பணி நடைபெறும் இடத்தில் தேங்கியுள்ள மழைநீரை அகற்றிவிட்டு, கட்டுமானப் பணியை துவக்க நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.