/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
காஞ்சி காமாட்சி அம்மனுக்கு 10 கிலோ வெள்ளி வீணை
/
காஞ்சி காமாட்சி அம்மனுக்கு 10 கிலோ வெள்ளி வீணை
ADDED : பிப் 05, 2025 12:46 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம்,காஞ்சி காமாட்சியம்மன் பக்தர்களான சென்னை நங்கநல்லுாரைச் சேர்ந்த விஜயகுமார் - நீரஜா தம்பதி, காஞ்சிபுரம் காமாட்சி அம்மனுக்கு தங்க முலாம் பூசப்பட்ட 10 கிலோ வெள்ளியில் செய்யப்பட்ட வீணையை, நேற்று காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் ஸ்ரீகாரியம் சுந்தரேச ஐயர், மணியக்காரர் சூரியநாராயணன் கோவில் ஸ்தானீகர்களிடம் காணிக்கையாக வழங்கினர்.
மூலவர் காமாட்சி அம்மனிடம் வீணை வைக்கப்பட்டு சிறப்பு தீபாராதனை நடந்தது.
முன்னதாக, காஞ்சிபுரம் சங்கர மடத்தில் மஹா ஸ்வாமிகள் மற்றும் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பிருந்தாவனத்தில் வீணை வைக்கப்பட்டு சிறப்பு பூஜை செய்யப்பட்டது.