/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
பலாத்காரத்தில் மகள் தற்கொலை தந்தைக்கு 10 ஆண்டு சிறை
/
பலாத்காரத்தில் மகள் தற்கொலை தந்தைக்கு 10 ஆண்டு சிறை
பலாத்காரத்தில் மகள் தற்கொலை தந்தைக்கு 10 ஆண்டு சிறை
பலாத்காரத்தில் மகள் தற்கொலை தந்தைக்கு 10 ஆண்டு சிறை
ADDED : ஜன 24, 2024 01:15 AM

செங்கல்பட்டு:தாம்பரம் அடுத்த பள்ளிக்கரணையைச் சேர்ந்த 48 வயது தனியார் நிறுவன ஊழியர், 2020 அக்டோபரில், வீட்டில் தனியாக இருந்த 16 வயது மகளை பாலியல் பலாத்காரம் செய்தார்.
இது குறித்து, மடிப்பாக்கம் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். சிறையில் இருந்து, மனைவி, மகளுக்கு, கொலை மிரட்டல் விடுத்தார்.
இதனால், மனமுடைந்த அவரின் மகள், தற்கொலை செய்து கொண்டார். பள்ளிக்கரணை போலீசார் இது குறித்தும் வழக்கு தொடர்ந்தனர்.
இதற்கிடையில், மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றத்தில், கடந்த ஆண்டு, ஆக., 31ல் நீதிபதி தமிழரசி, தீர்ப்பளித்தார்.
சிறுமி தற்கொலை வழக்கு, செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றத்தில், நீதிபதி எழிலரசி முன்னிலையில், நடைபெற்றது. அரசு தரப்பில் வழக்கறிஞர் சசிரேகா ஆஜரானார்.
வழக்கு விசாரணை முடிந்து, குற்றம் நிரூபிக்கப்பட்டதால், சுரேஷுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், 10,000 ரூபாய் அபராதமும், கட்டத்தவறினால் மூன்று மாதம் சிறை தண்டனை விதித்து, நீதிபதி எழிலரசி நேற்று தீர்ப்பளித்தார்.
மேலும், பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயாருக்கு, அபராத தொகையில், 6,000 ரூபாய் வழங்க வேண்டும் என, நீதிபதி உத்தரவிட்டார். அதன்பின், அவரை புழல் சிறையில் போலீசார் அடைத்தனர்.

