ADDED : மார் 17, 2025 12:56 AM

காஞ்சிபுரம்:பெரிய காஞ்சிபுரம், அங்காளம்மன் கோவில் தெரு, சிவ காஞ்சி போலீஸ் நிலையம் பின்புறம் உள்ள மாதண்ணம் சிவபெருமான், காஞ்சி கடுவெளி சித்தர் ஞான பீடம் உள்ளது.
கடந்த 2015ம் ஆண்டு, மார்ச் 15ம் தேதி, இக்கோவிலில் உள்ள சிவலிங்க திருமேனியில், கடுவெளி சித்தர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதையொட்டி, கடுவெளி சித்தரின் நினைவாக ஒவ்வொரு ஆண்டும், மார்ச் 15ம் தேதி, திருவிளக்கு பூஜை நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி, 10ம் ஆண்டு திருவிளக்கு பூஜை நேற்று முன்தினம் இரவு நடந்தது. இதில், 108 பெண்கள் பங்கேற்ற திருவிளக்கு பூஜையும், மாணவியரின் பரதநாட்டிய நிகழ்ச்சியும் நடந்தது.
முன்னதாக மாதண்ணம் சிவபெருமானுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் மஹா தீபாராதனை நடந்தது. திருவிளக்கு பூஜையில் பங்கேற்ற பக்தர்கள் அனைவருக்கும் அறங்காவலர் குழு தலைவர் ஜோதி பிரகாசம் சுவாமியிடம் பூஜிக்கப்பட்ட பல்வேறு பூஜை பொருட்கள் அடங்கிய பிரசாத பை வழங்கினார்.