/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மங்களேஸ்வரருக்கு 108 சங்காபிஷேகம்
/
மங்களேஸ்வரருக்கு 108 சங்காபிஷேகம்
ADDED : டிச 03, 2024 09:53 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் பொன்னேரிக்கரை ராஜேஸ்வரி நகரில் உள்ள மங்களாம்பிகை உடனாகிய மங்களேஸ்வரர் கோவில் உள்ளது.
இக்கோவிலில் கார்த்திகை மாத மூன்றாவது வார சோமவாரத்தை ஒட்டி நேற்று முன்தினம் மாலை 108 ருத்ரகாயத்ரி ஹோமம், 108 சங்குபூஜை நடந்தது. இரவு 7.00 மணிக்கு மங்களேஸ்வரருக்கு 108 மகா சங்கு கலசாபிஷேகம் அபிஷேகம், சிறப்பு அலங்காரம், 108 நாமாவளி அர்ச்சனை மற்றும் சிறப்பு தீபாராதனை நடந்தது.