/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
முத்தீஸ்வரர் கோவிலில் 108 திருவிளக்கு பூஜை
/
முத்தீஸ்வரர் கோவிலில் 108 திருவிளக்கு பூஜை
ADDED : ஆக 04, 2024 01:38 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் காந்தி சாலையில், 63 நாயன்மார்களில் ஒருவரான திருக்குறிப்பு தொண்ட நாயனார் முக்திபெற்ற ஸ்தலமான முத்தீஸ்வரர் கோவிலில், ஆடி மூன்றாவது வெள்ளியையொட்டி நேற்று முன்தினம், 108 திருவிளக்கு பூஜை நடந்தது.
பூஜையில் பங்கேற்ற பெண்கள், 108 குத்து விளக்கேற்றி, துர்கா, லட்சுமி, சரஸ்வதி மற்றும் அவரவர் குலதெய்வத்தை வணங்கி, 1008 லலிதா சகஸ்ரநாம பூஜை செய்து, குடும்ப நலம், உலக நன்மை வேண்டி பூஜை செய்தனர்.