/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
'பாஸ்' அமைப்பு சார்பில் 118 யூனிட் ரத்த தானம்
/
'பாஸ்' அமைப்பு சார்பில் 118 யூனிட் ரத்த தானம்
ADDED : ஜன 27, 2024 11:41 PM

ஸ்ரீபெரும்புதுார், ஸ்ரீபெரும்புதுாரில், 'பாஸ்' அமைப்பு நடத்திய முகாமில் பெறப்பட்ட 118 யூனிட் ரத்தம் அரசு மருத்துவமனைக்கு தானமாக அளிக்கப்பட்டது.
ஸ்ரீபெரும்புதுாரில், 'பாஸ்' என்ற தொண்டு அமைப்பு இயங்குகிறது. இவர்கள், ஸ்ரீபெரும்புதுாரில் மரம் வளர்த்தல், ரத்ததானம், கல்வி வளர்ச்சி உள்ளிட்ட பல்வேறு சேவையில் ஈடுபட்டு வருகின்றனர்.
குடியரசு தினத்தை முன்னிட்டு 60 மற்றும் 61வது ரத்த தான முகாமை சுங்குவார்சத்திரம், ஸ்ரீபெரும்புதுாரில் நேற்று முன்தினம் நடத்தினர்.
இதில் 118 தன்னார்வலர்கள் பங்கேற்று ரத்த தானம் அளித்தனர்.
தானமாக பெறப்பட்ட 118 யூனிட் ரத்தம், காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு வழங்கப்பட்டது.