/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
'கல்லுாரி கனவு' நிகழ்ச்சி 1,200 மாணவர்கள் பங்கேற்பு
/
'கல்லுாரி கனவு' நிகழ்ச்சி 1,200 மாணவர்கள் பங்கேற்பு
'கல்லுாரி கனவு' நிகழ்ச்சி 1,200 மாணவர்கள் பங்கேற்பு
'கல்லுாரி கனவு' நிகழ்ச்சி 1,200 மாணவர்கள் பங்கேற்பு
ADDED : மே 16, 2025 09:02 PM
ஸ்ரீபெரும்புதுார்:ஸ்ரீபெரும்புதுாரில் உள்ள ஸ்ரீவெங்கடேஸ்வரா பொறியியல் கல்லுாரியில், 'நான் முதல்வன்' திட்டத்தின்கீழ், பிளஸ்- 2 தேர்ச்சி பெற்ற மாணவ - மணவியரின் உயர் கல்வி பெற வழிகாட்டும், 'கல்லுாரி கனவு' நிகழ்ச்சி நேற்று நடந்தது.
இந்த நிகழ்ச்சிக்கு, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி தலைமை வகித்தார். இதில், 1,200க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் பங்கேற்றனர். இதில், உயர்கல்வி சார்ந்த சந்தேகங்களும் துறைசார் வல்லுனர் வாயிலாக விளக்கும் அளிக்கப்பட்டது.
இருப்பிட சான்றிதழ், வருவாய் சான்றிதழ் மற்றும் ஜாதி சான்றிதழ் பெறுவதற்கு உதவியாகவும், கல்லுாரிகளுக்கு இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கவும், கல்லுாரி கட்டணம் செலுத்த இயலாத நிலையில் உள்ள மாணவர்களுக்கு கல்வி கடன் பெறுவது சார்ந்து சந்தேகங்கள் விளக்கம் அளிக்கப்பட்டது.
தொடர்ந்து 'கல்லுாரி கனவு' கையேட்டினை, கலெக்டர் கலைச்செல்வி வெளியீட்டு, மாணவ - மாணவியருக்கு வழங்கினார். நிகழ்ச்சியில், ஸ்ரீபெரும்புதுார் சப் - கலெக்டர் மிருணாளினி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வெற்றிச்செல்வி உட்பட பலர் பங்கேற்றனர்.