/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
இரட்டை தாளீஸ்வரர் கோவிலில் உண்டியல் வசூல் ரூ.1.25 லட்சம்
/
இரட்டை தாளீஸ்வரர் கோவிலில் உண்டியல் வசூல் ரூ.1.25 லட்சம்
இரட்டை தாளீஸ்வரர் கோவிலில் உண்டியல் வசூல் ரூ.1.25 லட்சம்
இரட்டை தாளீஸ்வரர் கோவிலில் உண்டியல் வசூல் ரூ.1.25 லட்சம்
ADDED : அக் 15, 2024 02:03 AM

உத்திரமேரூர், உத்திரமேரூரில், ஹிந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டிலான இரட்டைத்தாளீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில், நவராத்திரி விழா நேற்று முன்தினம் நிறைவு பெற்றது. அடுத்த மாதம் அன்னாபிஷேக விழா நடைபெற உள்ளது.
இந்நிலையில், கோவில் உண்டியலில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை நேற்று எண்ணப்பட்டன. உத்திரமேரூர் ஹிந்து சமய அறநிலையத் துறை காவல் ஆய்வாளர் அலமேலு மற்றும் அக்கோவில் அறங்காவலர் குழு தலைவர் ஞானமணி ஆகியோர் முன்னிலையில், கோவில் ஊழியர்கள் காணிக்கையை எண்ணினர். உண்டியலில், 1 லட்சத்து 24,324 ரூபாய் பணம் இருந்தது.
உண்டியல் காணிக்கை பணம் கோவில் வங்கி கணக்கில் செலுத்தப்படும் என கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப் பட்டது.