தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ மறியல் போராட்டம் செய்த 140 அங்கன்வாடி ஊழியர்கள் கைது

 மறியல் போராட்டம் செய்த 140 அங்கன்வாடி ஊழியர்கள் கைது

 மறியல் போராட்டம் செய்த 140 அங்கன்வாடி ஊழியர்கள் கைது


ADDED : ஜன 07, 2026 05:52 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 07, 2026 05:52 AM


Follow on Google
அ நிறம் | அளவு

காஞ்சிபுரம்: சம்பள உயர்வு, விடுமுறை என, 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, மறியல் போராட்டம் செய்த, 140 அங்கன்வாடி ஊழியர்கள் நேற்று கைது செய்யப்பட்டனர்.

அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர் களை அரசு ஊழியர்களாக அறிவிக்க வேண்டும்; பதவி உயர்வில் செல்வோருக்கு சம்பள உயர்வு; மே மாதம் விடுமுறை வழங்குவது என, 9 அம்ச கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்றக்கோரி, தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் கேட்டு வருகிறது.

இந்நிலையில், தங்களது 9 அம்ச கோரிக்கையை நிறைவேற்ற, தமிழகம் முழுதும் நேற்று இச்சங்கம் போராட்டங்களை நடத்தியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் சார்பில், காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகம் அருகே, அங்கன்வாடி ஊழியர்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மறியலில் ஈடுபட்ட 140 ஊழியர்களை போலீசார் கைது செய்தனர். காஞ்சிபுரம் தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்ட அவர்களை மாலை விடுவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us