/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
பாதுகாப்பை அதிகரிக்கும் வகையில் 2 ஊராட்சிகளில் 140 'சிசிடிவி' கேமரா அமைப்பு
/
பாதுகாப்பை அதிகரிக்கும் வகையில் 2 ஊராட்சிகளில் 140 'சிசிடிவி' கேமரா அமைப்பு
பாதுகாப்பை அதிகரிக்கும் வகையில் 2 ஊராட்சிகளில் 140 'சிசிடிவி' கேமரா அமைப்பு
பாதுகாப்பை அதிகரிக்கும் வகையில் 2 ஊராட்சிகளில் 140 'சிசிடிவி' கேமரா அமைப்பு
ADDED : ஜூன் 11, 2025 01:50 AM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டத்தில் கருப்படிதட்டடை, வைப்பூர் ஆகிய இரண்டு ஊராட்சிகளில், பல்வேறு இடங்களில் 140 'சிசிடிவி' கேமராக்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
கிராம ஊராட்சிகளின் பாதுகாப்பை அதிகரிக்கும் வகையில், ஊராட்சி நிர்வாகங்களும், தங்கள் நிதி நிலைமைக்கு ஏற்ப, கண்காணிப்பு கேமராக்களை பொருத்துகின்றன.
அந்த வகையில், காஞ்சிபுரம் ஒன்றியம், கருப்படிதட்டடை ஊராட்சி முழுதும் உள்ள முக்கிய சாலை சந்திப்புகளில், 126 கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளன.
இதுகுறித்து கருப்படிதட்டடை ஊராட்சி தலைவர் பொன்னா கூறியதாவது:
ஊராட்சிக்கு உட்பட்ட கிராமங்களில் சட்டம் - ஒழுங்கு பாதுகாக்கவும் குற்ற செயல்களை தடுக்கும் வகையிலும், குற்ற செயலில் ஈடுபடுவோரை எளிதில் அடையாளம் காணும் வகையில், கண்காணிப்பு கேமராக்கள் வைக்கப்பட்டு வருகின்றன.
கருப்படிதட்டடை ஊராட்சி எல்லை பகுதியான அரக்கோணம் சாலை, கரியன் கேட், ஒலிமுகமதுபேட்டை, பஞ்சுபேட்டை மின்வாரிய அலுவலகம்,உள்ளிட்ட முக்கிய சாலை சந்திப்புகளில் மொத்தம் 126 கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.
வைப்பூர்
குன்றத்துார் ஒன்றியம், வைப்பூர் கிராமத்தில், 300க்கும் அதிகமான வீடுகள் உள்ளன. தவிர, ஒரகடம் சிப்காட் தொழிற்பூங்காவில் உள்ள ஏராளமான தொழிற்சாலைகளில், 1,000க்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் தங்கி பணியாற்றுகின்றனர்
வடமாநில தொழிலாளர்களை மிரட்டி, மொபைல் போன் பறிப்பு, வழிப்பறி உள்ளிட்ட சம்பவங்கள் நடக்கின்றன. கிராம மக்களுக்கு பாதுகாப்பும் தேவைப்படுகிறது.
இதனால், ஊராட்சி நிர்வாகம் சார்பில், 4.20 லட்சம் ரூபாய் செலவில், மாரியம்மன் கோவில் தெரு, மேட்டுத் தெரு, ராகலாம்மன் கோவில் தெரு, பெருமாள் கோவில் தெரு உள்ளிட்ட பகுதிகளில் 14 கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணி நடந்து வருகின்றன.
இணைப்பு வழங்கும் பணி முடிந்ததும். விரைவில் கண்காணிப்பு கேமரா துவக்க விழா நடைபெறும்,
இந்த கேமராக்களில் பதிவாகும் காட்சிகள் ஒரு மாதம் வரை சேமித்து வைக்க முடியும்.