/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
143 மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கல்
/
143 மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கல்
ADDED : டிச 03, 2024 09:52 PM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், மாற்றுத்திறனாளிகள் தினவிழா, காஞ்சிபுரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், கைத்தறி மற்றும் துணிநுால் துறை அமைச்சர், காந்தி தலைமையில் நேற்று நடந்தது. இதில், 143 மாற்றுத்திறனாளிகளுக்கு, 21.8 லட்ச ரூபாய் மதிப்பிலான உதவி உபகரணங்களை, அமைச்சர் காந்தி வழங்கினார்.
தொடர்ந்து மாவட்ட அளவில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவியருக்கு பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.
மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பாக சேவை செய்த மருத்துவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கினார். மாற்றுத்திறனாளி குழந்தைகளின் கலை நிகழ்ச்சி நடந்தது.