/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
காஞ்சியில் வரும் 14ல் கூட்டுறவு வார விழா
/
காஞ்சியில் வரும் 14ல் கூட்டுறவு வார விழா
ADDED : நவ 06, 2024 07:42 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் கூட்டுறவு மண்டலத்தில், நவ.,14ம் தேதி முதல், 20ம் தேதி வரை கூட்டுறவு வார விழா நடைபெற உள்ளது.
இதில், காஞ்சிபுரம் மண்டலத்தில் சிறப்பாக செயல்படும் கூட்டுறவு சங்கங்களுக்கு, பாராட்டு சான்று மற்றும் கேடயம் வழங்கி கவுரவிக்கப்பட உள்ளன.
எனவே, கூட்டுறவு சங்கங்கள் தங்களின் சுய விபரங்களை இணைய தளத்தில் பதிவேற்றம் செய்து, பரிந்துரை செய்ய வேண்டும் என, கூட்டுறவு சங்க இணைப் பதிவாளர் ஜெயஸ்ரீ தெரிவித்தார்.