/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
ஆலப்பாக்கம் நிவாரண முகாமில் 16 பேர் தங்கவைப்பு
/
ஆலப்பாக்கம் நிவாரண முகாமில் 16 பேர் தங்கவைப்பு
ADDED : டிச 02, 2024 02:10 AM

உத்திரமேரூர்:-உத்திரமேரூர் தாலுகா, ஆலப்பாக்கம் கிராமத்தில், 'பெஞ்சல்' புயலால் நேற்று முன்தினம் கனமழை பெய்தது. மழை வெள்ளத்தால் பாதிப்பு ஏற்படுவதை தவிர்க்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தாழ்வான பகுதியில் வசித்து வந்த பழங்குடியினர் 16 பேரை, வருவாய் துறையினர் மீட்டனர்.
பின், ஆலப்பாக்கம் அங்கன்வாடி மையத்தில் இயங்கி வரும், மழை நிவாரண முகாமில் தங்க வைத்துள்ளனர். முகாமில் தங்கியுள்ளவர்களுக்கு போர்வை, உணவு, பிரட், பால் ஆகியவை வழங்கப்பட்டு வருகிறது.
இது குறித்து ஆலப்பாக்கம் கிராம நிர்வாக அலுவலர் மலர்கொடி கூறியதாவது:
'பெஞ்சல்' புயலால் ஏற்பட்ட பாதிப்பிலிருந்து பொதுமக்களை காப்பாற்ற மழை நிவாரண முகாம் அமைக்கப்பட்டு, அவர்களுக்கு தேவையான உணவு, போர்வை ஆகியவை வழங்கப்பட்டு வருகிறது.
அதை தொடர்ந்து, அவர்கள் மழை நேரத்தில் தாழ்வான பகுதிக்கு செல்லாதபடிக்கு கண்காணித்து வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.