/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
காஞ்சியில் 16 வயது சிறுமி கர்ப்பம் போக்சோ சட்டத்தில் இருவர் கைது
/
காஞ்சியில் 16 வயது சிறுமி கர்ப்பம் போக்சோ சட்டத்தில் இருவர் கைது
காஞ்சியில் 16 வயது சிறுமி கர்ப்பம் போக்சோ சட்டத்தில் இருவர் கைது
காஞ்சியில் 16 வயது சிறுமி கர்ப்பம் போக்சோ சட்டத்தில் இருவர் கைது
ADDED : அக் 23, 2024 07:11 PM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் நகரில் வசிக்கும், 16 வயது சிறுமி, காஞ்சிபுரத்தில் உள்ள தனியார் கல்வி நிறுவனத்தில் டிப்ளமோ படித்து வருகிறார். இவருக்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்ட நிலையில், அவரது தாயார் மருத்துவமனைக்கு அழைத்து சென்று பரிசோதனை செய்ததில், சிறுமி கர்ப்பமாக இருந்தது தெரியவந்துள்ளது.
அதிர்ச்சியடைந்த பெற்றோர், சிறுமியிடம் பழகிய நபர்கள் பற்றியும், சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கவும், காஞ்சிபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கடந்த 6ம் தேதி புகார் அளித்துள்ளார். போலீசார் சிறுமியிடம் விசாரித்தனர்.
அப்போது, காஞ்சிபுரத்தைச் சேர்ந்த வெங்கட், ஒலிமுகமதுபேட்டையைச் சேர்ந்த சித்தீஸ், 21, சிறுகாவேரிப்பாக்கத்தைச் சேர்ந்த குலசேகரன், 26. ஆகிய மூவரும், வெவ்வேறு நாட்களில், சிறுமியிடம் பழகி, பாலியல் வன்புணர்ச்சி செய்து வந்ததாக சிறுமி தெரிவித்துள்ளார்.
இதனால், சிறுமி கர்ப்பமானது போலீஸ் விசாரிணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து, போக்சோ வழக்குப்பதிவு செய்த போலீசார், சித்தீஸ் மற்றும் குலசேகரன் ஆகிய இருவரையும் கைது செய்தனர். வெங்கட் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.