/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
காஞ்சி ஏகாம்பரநாதர் கோவிலில் 16ல் சோமவார அபிஷேகம்
/
காஞ்சி ஏகாம்பரநாதர் கோவிலில் 16ல் சோமவார அபிஷேகம்
ADDED : நவ 09, 2024 10:03 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம்,:காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில், நடப்பாண்டு கார்த்திகை சோமவாரமான வரும் 18ம் தேதி, காலை 6:00 மணி முதல், இரவு 8:00 மணி வரை, கோவிலில் உள்ள அனைத்து சிலைகளுக்கும், அபிஷேக ஆராதனை விழா, இக்கோவிலில் உள்ள அர்ச்சகர்கள், கோவில் அலுவலர்கள், அறங்காவலர்கள், பக்தர்கள் முன்னிலையில் நடைபெறுகிறது.
விழாவிற்கான ஏற்பாட்டை ஹிந்து சமய அறநிலையத் துறையினர், அறங்காவலர்கள், காஞ்சிபுரம் திருவேகம்பநாதர் திருக்கோவில் கார்த்திகை முதற்சோமவார வழிபாட்டு குழு அறக்கட்டளையினர் இணைந்து செய்து வருகின்றனர்.