/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
காஞ்சி கச்சபேஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேக முதலாம் ஆண்டு விழா
/
காஞ்சி கச்சபேஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேக முதலாம் ஆண்டு விழா
காஞ்சி கச்சபேஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேக முதலாம் ஆண்டு விழா
காஞ்சி கச்சபேஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேக முதலாம் ஆண்டு விழா
ADDED : ஜன 21, 2025 06:31 PM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் ராஜ வீதியில் அமைந்துள்ள கச்சபேஸ்வரர் கோவில் 1,600 ஆண்டுகள் பழமையானது. இக்கோவிலில் திருமால், சரஸ்வதி, விநாயகர், சூரியன், பைரவர் உள்ளிட்டோர் கச்சபேஸ்வரரை வழிபட்டு, பேறு பெற்றதாக கோவில் வரலாறு கூறுகிறது.
பல்வேறு சிறப்பு பெற்ற இக்கோவிலில், கடந்த 2005ம் ஆண்டு ஜூன் 10ம் தேதி கும்பாபிஷேகம் நடந்தது. இக்கோவிலை புதுப்பித்து கும்பாபிஷேகம் நடத்த காஞ்சி நகர செங்குந்த மகாஜன சங்க சமுதாயத்தினர் மற்றும் ஹிந்து அறநிலையத்துறையினர் முடிவு செய்தனர்.
அதன்படி, 3 கோடி ரூபாய் செலவில் பல்வேறு திருப்பணிகள் செய்யப்பட்டு, கடந்தாண்டு தை மாதம் சித்திரை நட்சத்திர தினமான பிப்., 1ம் தேதி கும்பாபிஷேகம் நடந்தது.
அதன்படி, நடப்பாண்டு தை மாதம் சித்திரை நட்சத்திரமான நேற்று, பெருங்குட நன்னீராட்டு பெருவிழாவின் முதலாம் ஆண்டு நிறைவு விழா நடந்தது.
விழாவையொட்டி, நேற்று காலை 7:00 மணிக்கு பஞ்சசந்தி விநாயகர், துர்க்கை, இஷ்டசித்தீஸ்வரர், சண்முகர், சரஸ்வதி, உற்சவ மூர்த்தி, பரிவார மூர்த்திகள் மற்றும் கச்சபேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் நடந்தது. விழாவிற்கான ஏற்பாட்டை காஞ்சிபுரம் நகர செங்குந்த மகாஜன சங்கத்தினர், கோவில் நிர்வாகத்தினர் இணைந்து செய்திருந்தனர்.