தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ ஆடு திருடிய 2 பேர் கைது

ஆடு திருடிய 2 பேர் கைது

ஆடு திருடிய 2 பேர் கைது


ADDED : ஆக 21, 2026 09:22 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 21, 2026 09:22 PM


Follow on Google
அ நிறம் | அளவு

உத்திரமேரூர், ஆக. 22– உத்திரமேரூர் அடுத்த, சாலவாக்கம் கிராமத்தில், இருசக்கர வாகனத்தில் வந்து, ஆடு திருடிய இருவரை போலீசார் கைது செய்தனர். உத்திரமேரூர் ஒன்றியம், சாலவாக்கம் கிராமம், மேட்டுத் தெருவைச் சேர்ந்த தமிழ்ச்செல்வி, 45. இவர் ஆடுகள் வளர்த்து வருகிறார்.

இவர், நேற்று முன்தினம் ஆடுகளை மேச்சலுக்கு ஓடிச் சென்று மேச்சல் முடித்து விட்டு அவரது வீட்டு அருகில் உள்ள ஆட்டு பட்டியில், ஆடுகளை அடைத்து வைத்தார்.

அப்போது ஆடுகள் கத்தும் சத்தம் கேட்டு வெளியில் வந்து பார்த்தபோது மர்ம நபர்கள் இருவர் ஆடுகளை பிடித்து பைக்கில் துாக்கிச் செல்வதை கண்டார். அப்போது, தமிழ்ச்செல்வி மற்றும் அக்கம்பக்கத்தினர் ஆடுகளை திருடிய இருவரையும் பிடித்தனர். சாலவாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் நடத்திய விசாரணையில், ஆடுகளை திருடியது செங்கை மாவட்டம், வேம்பாக்கம் பகுதியை சேர்ந்த பெருமாள், 42. வெங்கடேசன், 37. ஆகியோர் என தெரியவந்தது. போலீசார் அவர்களை கைது செய்து திருட்டுக்கு பயன்படுத்திய இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us