/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
நிழற்குடை மீது லாரி மோதி 2 பேர் காயம்
/
நிழற்குடை மீது லாரி மோதி 2 பேர் காயம்
ADDED : ஆக 14, 2025 02:13 AM

வாலாஜாபாத்;மதுராநல்லுார் சாலையோர பயணியர் நிழற்குடை மீது லாரி மோதிய விபத்தில் ஒட்டுநர் மற்றும் கிளீனர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தாம்பரத்தில் இருந்து, திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு பகுதியில் இயங்கும் தனியார் தொழிற்சாலை ஒன்றுக்கு, நேற்று காலை, டாரஸ் லாரி ஒன்று சென்றுக் கொண்டிருந்தது.
ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா பகுதியைச் சேர்ந்த மோகன்ராஜ், 29, லாரியை இயக்க, அதே பகுதியைச் சேர்ந்த விக்னேஷ், 32, உடன் இருந்தார்.
அப்போது, ஒரகடம் - வாலாஜாபாத் சாலை வழியாக சென்றபோது, மதுராநல்லுார் அருகே கட்டுப்பாட்டை இழந்த லாரி, சாலையோர நிழற்குடை மீது மோதியது. இதில், மோகன்ராஜ், விக்னேஷ் இருவரும் படுகாயம் அடைந்தனர்.
அப்பகுதியினர் அவர்களை மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் செங்கல்பட்டு அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, அங்கு இருவரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விபத்து குறித்து வாலாஜாபாத் போலீசார் விசாரிக்கின்றனர்.