/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
ஆசிய அளவிலான கிக் பாக்ஸிங் போட்டி பதக்கம் வென்ற மாணவி 2 லட்சம் பரிசு

ADDED : நவ 06, 2024 07:09 PM

காஞ்சிபுரம்:சென்னை பச்சையப்பன் அறக்கட்டளையின்கீழ் செயல்படும், காஞ்சிபுரம் பச்சையப்பன் மகளிர் கல்லுாரியில், முதுகலை தமிழ் இரண்டாமாண்டு பயிலும் மாணவி நீனா, கடந்த மாதம் கம்போடியாவில் நடந்த ஆசியன் கிக்பாக்ஸிங் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் சார்பில் பங்கேற்று 55 எடை கிலோ பிரிவில் பாயிண்ட் பைட் பிரிவில் ஒரு தங்கப்பதக்கமும் மற்றும் காண்டாக்ட் பார்ம்ஸ் ஆகிய பிரிவுகளில் 2 வெள்ளிப்பதக்கமும் வென்று சாதனை படைத்துள்ளார்.
பதக்கம் வென்று சாதனை படைத்த மாணவி நீனாவை, பச்சையப்பன் மகளிர் கல்லுாரியும், பச்சையப்பன் அறக்கட்டளை நிர்வாகமும் பாராட்டி, அறக்கட்டளை சார்பில், மாணவி நீனாவுக்கு 2 லட்சம் ரூபாய்க்கான காசோலையை, சென்னை பச்சையப்பன் அறக்கட்டளை தவைவர் ஒய்வு பெற்ற நீதிபதி பார்த்திபன், செயலர் துரைக்கண்ணு ஆகியோர் வழங்கினர். கல்லுாரி முதல்வர் முனைவர் மு.கோமதி உடனிருந்தார்.