ADDED : மார் 16, 2026 05:46 AM
அ நிறம் | அளவு
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில், 'குருப் -2ஏ' மெயின் தேர்வில், 20 பேர் தேர்வு எழுத வரவில்லை.
காஞ்சிபுரம் மாவட்டத்தில், 'குருப் -2ஏ' மெயின் தேர்வு பெரிய காஞ்சிபுரம் மகளிர் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நேற்று நடந்தது. இதில், 283 பேர் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டு இருந்தனர்.
இந்த தேர்வுக்கு, 263 பேர் மட்டுமே தேர்வு எழுத வந்தனர். 20 பேர் தேர்வுக்கு வரவில்லை. தேர்வு மையத்தில் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.
