ADDED : மே 23, 2025 09:33 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குன்றத்துார்:குன்றத்துார் அருகே சோமங்கலம் அடுத்த பவானி நகர், தாராபுரம் பகுதியைச் சேர்ந்தவர் தேவேந்திரன், 30; பிளம்பர்.
இவர் குடும்பத்துடன் நேற்று வெளியே சென்று, மாலை வீடு திரும்பினார். அப்போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த 20 சவரன் நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டிருந்தது.
இது குறித்து சோமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.