/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
21 அடி உயர சிவபெருமான் சிலைக்கு 'ட்ரோன்' வாயிலாக பாலாபிஷேகம்
/
21 அடி உயர சிவபெருமான் சிலைக்கு 'ட்ரோன்' வாயிலாக பாலாபிஷேகம்
21 அடி உயர சிவபெருமான் சிலைக்கு 'ட்ரோன்' வாயிலாக பாலாபிஷேகம்
21 அடி உயர சிவபெருமான் சிலைக்கு 'ட்ரோன்' வாயிலாக பாலாபிஷேகம்
ADDED : மார் 16, 2025 11:49 PM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் சன்னிதி தெருவில், வண்டார் குழலி சமேத தான்தோன்றீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலின் நுழைவாயிலில் 16 அடி மண்டபத்தின் மேல், 21 அடி உயரத்தில் சிவபெருமான் ஒற்றை காலில் நின்ற நிலையில், பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.
இச்சிலை நிர்மாணிக்கப்பட்டு 9 ஆண்டுகள் நிறைவு பெற்றதை தொடர்ந்து பொலிவிழந்த நிலையில் இருந்தது. எனவே, சிவபெருமான் சிலை புதுப்பொலிவு பெறும் வகையில் வர்ணம் தீட்ட கோவில் நிர்வாகத்தினர் முடிவு செய்தனர்.
அதன்படி வர்ணம் பூசப்பட்டு சிவபெருமான் சிலை புதுப்பொலிவு பெற்றது. இதை தொடர்ந்து நேற்று காலை, 21 அடி உயரம் உள்ள சிவபெருமான் சிலைக்கு, ட்ரோனில், 21 லிட்டர் பால் நிரப்பி அதன் வாயிலாக பாலாபிஷேகம் செய்யப்பட்டது. இதில், திரளான பக்தர்கள் சிவபெருமானுக்கு நடந்த பாலாபிஷேகத்தை தரிசித்தனர்.