/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
லாரி மீது வேன் மோதல் குன்றத்துாரில் 21 பேர் காயம்
/
லாரி மீது வேன் மோதல் குன்றத்துாரில் 21 பேர் காயம்
ADDED : ஜன 10, 2025 02:28 AM

குன்றத்துார், சென்னை வளசரவாக்கத்தில் உள்ள மதுபான தயாரிக்கும் தொழிற்சாலைக்கு, கூடுவாஞ்சேரி, முடிச்சூர், படப்பை பகுதி களில் இருந்து நேற்று, ஊழியர்களை ஏற்றிக்கொண்டு வேன் ஒன்று சென்றது. திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த ஆனந்த், 26, வேனைஓட்டிச்சென்றார்.
வண்டலுார் - - மீஞ்சூர் வெளிவட்ட சாலை, குன்றத்துாரை அடுத்த திருமுடிவாக்கத்தை கடந்தபோது, முன்னால் சென்ற லாரி மீது, எதிர்பாராத விதமாக வேன் மோதியது. வேனின் முன்பகுதி சேதமடைந்தது. ஓட்டுநர் ஆனந்துக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. வேனில் பயணித்த, 18 பெண்கள், 3 ஆண்கள் உட்பட, 21 பேருக்கு காயம் ஏற்பட்டது.
டிரைவர் தவிர மற்றவர்கள், குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். விபத்து குறித்து, குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

