UPDATED : செப் 03, 2026 08:40 PM
ADDED : செப் 03, 2026 08:31 PM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரத்தில் உள்ள கடைகளில், மாநகராட்சி அதிகாரிகள் நேற்று நடத்திய சோதனையில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 25 கிலோ பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்து, 22 ஆயிரம் ரூபாய் அபராதம் வசூலித்தனர்.
ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பைகள், கப்புகள், தட்டுகள் உள்ளிட்ட பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி மற்றும் விற்பனை செய்வதற்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது.
இதை கட்டுப்படுத்தும் வகையில், காஞ்சிபுரம் மாநகராட்சி கமிஷனர் வினோத் உத்தரவின்படி, மாநகராட்சி துாய்மை அலுவலர் சுகவனம் தலைமையில், துாய்மை ஆய்வாளர்கள், மேற்பார்வையாளர்கள் நேற்று காஞ்சிபுரத்தில் உள்ள பல்வேறு கடைகளில் ஆய்வு செய்தனர்
இதில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்வதற்காக இருப்பு வைத்திருந்த மூன்று கடைகளில் இருந்து, 25 கிலோ பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்து, சம்பந்தபட்ட கடை உரிமையாளர்களிடம் இருந்து, 22 ஆயிரம் ரூபாய் அபராதம் வசூலித்தனர்.
எனவே, பொதுமக்களும் தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள பிளாஸ்டிக் பொருள்களை பயன்படுத்த வேண்டாம் என, காஞ்சிபுரம் மாநகராட்சி கமிஷனர் வினோத் தெரிவித்துள்ளார்.
