/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
2.5 சவரன் நகை திருடிய பெண் கைது
/
2.5 சவரன் நகை திருடிய பெண் கைது
ADDED : அக் 21, 2024 01:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
படப்பை:குன்றத்துார் அருகே வரதராஜபுரம் பாலாஜி நகரைச் சேர்ந்தவர் சுதர்சனன், 31.
இவரது வீட்டில் வேலை செய்து வந்த ஜோதிமணி,50, என்ற பெண், ஒரு மாதத்திற்கு முன், வீட்டிலிருந்து 2.5 சவரன் நகையை திருடிக் கொண்டு தலைமறைவானார்.
இதுகுறித்து சுதர்சனன் மணிமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். ஆனால் போலீசார் குற்றவாளியை பிடிக்கவில்லை.
இதையடுத்து சுதர்சனன், அந்த பெண் குறித்து விசாரித்து, அவர் படப்பை அருகே காந்தி நகரில் இருப்பதை அறிந்தார்.
அந்த பெண்ணை பிடித்து, மணிமங்கலம் காவல் நிலையத்தில் நேற்று ஒப்படைத்தார். ஜோதிமணியிடம் இருந்த நகையை பறிமுதல் செய்த போலீசார், நேற்று அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.