/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
டேக் வாண்டோ போட்டி காஞ்சி வீரர்களுக்கு 28 பதக்கங்கள்
/
டேக் வாண்டோ போட்டி காஞ்சி வீரர்களுக்கு 28 பதக்கங்கள்
டேக் வாண்டோ போட்டி காஞ்சி வீரர்களுக்கு 28 பதக்கங்கள்
டேக் வாண்டோ போட்டி காஞ்சி வீரர்களுக்கு 28 பதக்கங்கள்
ADDED : நவ 26, 2025 03:54 AM

காஞ்சிபுரம்: சென்னையில் நடந்த மாநில அளவிலான டேக் வாண்டோ சாம்பியன்ஷிப் போட்டியில், காஞ்சிபுரத்தைச் சேர்ந்த பல்லவர் டேக் வாண்டோ அசோசியேஷன் மாணவ- மாணவி யர் 11 தங்கம்; 10 வெள்ளி, 7 வெண்கலம் என, 28 பதக்கங்கள் பெற்று சிறப்பிடம் பெ ற்றனர்.
சென்னை ராயப் பேட்டையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ., திடலில், மாநில அளவிலான முதலாவது டேக் வாண்டோ சாம்பியன் ஷிப், 'ஐ.டி.எப்., ' கோப்பைக்கான போட்டி கடந்த 22, 23 ஆகிய இரு நாட்கள் நடந்தன.
இப்போட்டியில் காஞ்சிபு ரம் பல்லவர் டேக் வாண்டோ அசோசியேஷன் சார்பில் செயலர் கணேஷ், பயிற்றுநர் கமலக்கண்ணன் தலைமையில் 14 மாணவ- - மாணவியர், இரு பிரிவாக நடந்த டேக் வாண்டோ போட்டியில் பங்கேற்றனர். இதில், 11 தங்கம், 10 வெள்ளி, 7 வெண்கலம் என, மொத்தம் 28 பதக்கங்கள், பாராட்டு சான்றிதழ் மற்றும் நினைவு பரிசு வென்று சிறப்பிடம் பெற்றுள்ளனர்.