/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
காஞ்சி சங்கரா பல்கலைக்கழகத்தில் நாளை 28 வது பட்டளிப்பு விழா
/
காஞ்சி சங்கரா பல்கலைக்கழகத்தில் நாளை 28 வது பட்டளிப்பு விழா
காஞ்சி சங்கரா பல்கலைக்கழகத்தில் நாளை 28 வது பட்டளிப்பு விழா
காஞ்சி சங்கரா பல்கலைக்கழகத்தில் நாளை 28 வது பட்டளிப்பு விழா
ADDED : பிப் 06, 2025 10:01 PM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் ஏனாத்துாரில் உள்ள சந்திரசேகரேந்திர சரஸ்வதி விஸ்வ மஹா வித்யாலயா நிகர்நிலை பல்கலைகழக வேந்தர் சீனிவாசு, பதிவாளர் ஸ்ரீராம், ஆகியோர் கூறியதாவது:
காஞ்சிபுரம் அடுத்த ஏனாத்தூரில் அமைந்துள்ள சங்கராபல்கலைக்கழகத்தில் 28வது பட்டமளிப்பு விழா நாளை மாலை 4:00 மணியளவில் பல்கலைகழகத்தில் அமைந்துள்ள மத்திய நுாலக வளாகத்தில் நடக்கிறது.
காஞ்சி மடாதிபதி விஜயேந்திரர் முன்னிலை வகிக்கிறார். வேந்தர் பேராசிரியர் வெம்பட்டி குடும்ப சாஸ்திரி தலைமை வகிக்கிறார். விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்கும் ஏ.ஐ.சி.டி.இ., தலைவர், பேராசிரியர் டி.ஜி சீதாராமன், 70 மாணவர்களுக்கு முனைவர் பட்டமும், 461 மாணவர்கள் உள்பட மொத்தம் 531 மாணவ-- மாணவியருக்கு இளநிலை, முதுநிலை மற்றும் ஆசிரியர் பட்டமும் வழங்க உள்ளார்.
விழாவில் 46 தங்க பதக்கங்கள், 23 வெள்ளி பதக்கங்கள் மற்றும் சிறப்பு ஊக்கத்தொகை பரிசுகளும் வழங்கபட உள்ளன.
தொடர்ந்து லேப் அறை திறக்கப்பட உள்ளது. மாணவர்கள் பயன்பெறும் வகையில் ஐடியல் டெக் பார்க், ஸ்கில் டெவலப்மென்ட் ஏற்படுத்தப்பட உள்ளது.
இதன்வாயிலாக 90 சதவீதம் பேர் வேலை வாய்ப்பு பெறுகின்றனர். பல்கலைக்கழகத்தையொட்டி உள்ள காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, ஆகிய மாவட்ட மாணவர்களுக்கு சேர்க்கையில் முன்னுரிமை. கல்வி கட்டணத்தில் சலுகை வழங்கப்படும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.