/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சங்கரா பல்கலைகழகத்தில் 28வது பட்டமளிப்பு விழா
/
சங்கரா பல்கலைகழகத்தில் 28வது பட்டமளிப்பு விழா
ADDED : பிப் 08, 2025 11:40 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அடுத்த, ஏனாத்துார் ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி விஸ்வ மஹா வித்யாலயா நிகர் நிலை பல்கலை கழகத்தில், 28வது பட்டமளிப்பு விழா நடந்தது.
நிகழ்ச்சிக்கு, ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி விஸ்வ மஹா வித்யாலயா பல்கலை கழக துணை வேந்தர் ஸ்ரீநிவாசு தலைமை வகித்தார். காஞ்சி காமகோடி பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் முன்னிலை வகித்தார்.
அகில இந்திய தொழில் நுட்ப கழக தலைவர் சீதாராமன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, இளங்கலை, முதுகலை ஆகிய பாடப்பிரிவுகளில் தேர்ச்சி பெற்ற, 461 நபர்களுக்கு பட்டங்களை வழங்கினார். பதிவாளர் ஸ்ரீராம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.