/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
உத்திரமேரூர் அரசு கல்லுாரியில் இன்று 2ம் கட்ட மாணவ - மாணவியர் சேர்க்கை

ADDED : ஜூன் 11, 2025 09:07 PM
உத்திரமேரூர்:உத்திரமேரூர் டாக்டர் எம்.ஜி.ஆர்., அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், இரண்டாம் கட்ட மாணவ - மாணவியர் சேர்க்கை கலந்தாய்வு இன்று துவங்குகிறது.
இதுகுறித்து கல்லுாரி முதல்வர் சுகுமாறன் கூறியதாவது:
உத்திரமேரூரில் டாக்டர் எம்.ஜி.ஆர்., அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி இயங்கி வருகிறது.
மாணவ - மாணவியர் படிக்கும் இந்த கல்லுாரியில், நடப்பாண்டிற்கான இளநிலை பாடங்களுக்கான இரண்டாம் கட்ட சேர்க்கை கலந்தாய்வு இன்று துவங்கி, நாளை மறுதினம் வரை நடக்க உள்ளது.
இன்று, அறிவியல் பாடங்களான கணிதம், கணினி அறிவியல், இயற்பியல், தாவரவியல் ஆகிய பாடங்களுக்கு சேர்க்கை கலந்தாய்வு நடக்கிறது. அதை தொடர்ந்து, நாளை, வணிகவியல், பொருளியல் பாடங்களுக்கும், பின், நாளை மறுதினம், தமிழ், ஆங்கிலம் ஆகிய பாடப்பிரிவுகளுக்கும் கலந்தாய்வு நடக்க உள்ளது.
மேலும், விபரங்களுக்கு www.gascuthiramerur.ac.in என்ற இணையதளத்தை பார்வையிட்டு தெரிந்து கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.