/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
1,100 போதை மாத்திரை மாங்காடில் 3 பேர் கைது
/
1,100 போதை மாத்திரை மாங்காடில் 3 பேர் கைது
ADDED : ஜூலை 02, 2025 11:11 PM
குன்றத்துார்:மும்பையில் இருந்து போதை மாத்திரைகளை வாங்கி வந்து, மாங்காட்டில் கல்லுாரி மாணவர்களுக்கு விற்ற மூவரை, போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மும்பையில் இருந்து வலி நிவாரணிக்கு பயன்படுத்தப்படும் போதை மாத்திரைகள் கடத்தி வரப்படுவதாகவும், ரயில் மூலம் பட்டாபிராம் வந்து, அங்கிருந்து ஆட்டோவில் மாங்காடு கொண்டுவரப்படுவதாகவும் தகவல் வந்ததால், நேற்று முன்தினம் மாங்காடு போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
அப்போது, குன்றத்துார் பிரதான சாலை சிக்கராயபுரத்தில் உள்ள தனியார் கல்லுாரி அருகே சென்ற ஆட்டோவை, போலீசார் மடக்கி சோதனை செய்தனர். இதில், ஆட்டோவில் பயணித்த மூவரிடமும், 1,100 போதை மாத்திரைகள் இருந்தன. மூவரிடமும் விசாரித்தபோது, மாங்காடு பகுதியை சேர்ந்த தினேஷ், 24, கோவூரை சேர்ந்த விக்னேஷ், 28, சீனிவாசன், 26, என்பது தெரிய வந்தது.
அவர்கள், மும்பையில் இருந்து போதை மாத்திரைகளை கடத்தி வந்து, மாங்காட்டில் உள்ள கல்லுாரி மாணவர்களுக்கு விற்றது தெரிய வந்தது. இதையடுத்து, அவர்களிடம் இருந்து போதை மாத்திரைகளை பறிமுதல் செய்த போலீசார், மூவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.