/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
காஞ்சிபுரம் பெண் கொலை வழக்கில் தப்பியோடிவரை பிடிக்க 3 தனிப்படைகள்
/
காஞ்சிபுரம் பெண் கொலை வழக்கில் தப்பியோடிவரை பிடிக்க 3 தனிப்படைகள்
காஞ்சிபுரம் பெண் கொலை வழக்கில் தப்பியோடிவரை பிடிக்க 3 தனிப்படைகள்
காஞ்சிபுரம் பெண் கொலை வழக்கில் தப்பியோடிவரை பிடிக்க 3 தனிப்படைகள்
ADDED : ஜூலை 30, 2025 12:26 AM
காஞ்சிபுரம், காஞ்சிபுரம் அருகே, திம்மசமுத்திரத்தில் வீட்டை கொள்ளையடிக்கும்போது பெண் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், ஏற்கனவே ஒருவரை கைது செய்த நிலையில், மற்றொருவரை பிடிக்க, மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
காஞ்சிபுரம் அடுத்த, வையாவூர் ஊராட்சியில் உள்ள எம்.ஜி.ஆர்., நகரைச் சேர்ந்தவர் ஜெயசுரேஷ். இவர் செங்கல்பட்டு அரசு மாணவர் விடுதியின் காப்பாளராக பணியாற்றுகிறார்.
இவரது மனைவி அஸ்வினி, 30. ஒரகடத்தில் உள்ள தனியார் தொழிற்சாலையில் அஸ்வினி, பணியாற்றி வந்ததால், பேருந்தில் கம்பெனிக்கு சென்று வர ஏதுவாக, காஞ்சிபுரம் அடுத்த திம்மசமுத்திரம் பகுதியில், அங்குள்ள வீட்டுவசதி வாரிய அடுக்குமாடி குடியிருப்பில் ஜெயசுரேஷூம், அஸ்வினியும் வாடகைக்கு தங்கி வந்தனர்.
இந்நிலையில், கடந்த 23ம் தேதி, மதியம் பணிக்கு சென்ற அஸ்வினி, இரவு 11:30 மணிக்கு வீட்டிற்கு வந்துள்ளார். அவரது கணவர் சென்னை சென்றிருந்தார்.
இந்நிலையில், மறுநாள் காலை அஸ்வினி போன் சுவிட்ச் ஆப் ஆகி இருந்தது. அவரது கணவர், பகல் 12:30 மணியளவில், அஸ்வினியின் சகோதரன் அறிவரசன், வீட்டிற்கு சென்று பார்த்தபோது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டு, ஆடைகள் கலைந்த நிலையில், உடலின் பல்வேறு இடங்களில் காயங்களுடன் அஸ்வினி ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்துள்ளார். அவர் அணிந்திருந்த நகைகள், வீட்டிலிருந்த பொருட்கள் மாயமாகி இருந்தன.
சிகிச்சைக்காக, செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில், சிகிச்சை பெற்று வந்த அஸ்வினி, ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார். கொலையாளிகளை கைது செய்ய, உறவினர்கள் நேற்று முன்தினம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்.
கொலை, கொள்ளை உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்த பொன்னேரிக்கரை போலீசார், இவ்வழக்கில் தீவிர விசாரணை நடத்தியதில், இருவர் இச்சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.
முதற்கட்டமாக, பாலுச்செட்டிச்சத்திரம் பகுதியைச் சேர்ந்த, தமிழ்வாணன், 28. என்பவரை கைது செய்துள்ளனர். தப்பியோடிய தண்டலத்தை சேர்ந்த ராஜசேகர் என்பவரை போலீசார், மூன்று தனிப்படைகள் அமைத்து தேடி வருகின்றனர்.
இவர் மீது, வழிப்பறி, அடிதடி என, ஏற்கனவே ஏழு வழக்குகள் உள்ளதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.
இவரை பிடிக்க, காஞ்சிபுரம் சங்கர் கணேஷ் தலைமையிலும், ஆய்வாளர் அலெக்சாண்டர் தலைமையிலும், உதவி ஆய்வாளர் கிஷோர் தலைமையில் என, மூன்று தனிப்படைகள் ராஜசேகரை தீவிரமாக தேடி வருகிறது.